Monday, March 26, 2018

மனிதனுடைய மன நிலைகளை இறைவனை விட யாரால் இத்தனை தெளிவாக சொல்ல முடியும்..!?

சிந்திப்பவர்களுக்கு நிறைய தெளிவுகள் இதில் இருக்கிறது..
"திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்".(36:77)
"மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன்
பேரில் அவன் பூரிப்படைகின்றான்.

மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்."(42:48)
"நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்".(41:49)
"மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான்.
கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது
நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான்".(41:51)
"மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்துக்குப் பிறகு அவனுக்கு நாம் அருளை வழங்கி இன்புறச் செய்தால், ‘துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன!’ என்று கூறுகின்றான்.
பிறகு பூரிப்பில் திளைத்தவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் ஆகிவிடுகின்றான்."
(11:10)
"மேலும் அவனை சோதிக்க நாடினால் மேலும் அவனுடைய வாழ்க்கை வசதிகளை குறைத்துவிட்டால் என் இறைவன் என்னை இழிவுபடுத்து விட்டான் என்று கூறுகின்றான்".(89:16)
"நாம் அவனுக்கு நம் சார்பிலிருந்து அருட்கொடையை அளி(த்து மகிழ்வி)க்கும்போது, இது எனக்கு என்னுடைய அறிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான்."(39:49)
"உண்மையில் ஒரு மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அவனே அதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்.மேலும் அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான்".(100:6,7,8)
"மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்".(4:28)
"மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்"
(103:2)
"மனிதன் பதற்றக் காரனாக படைக்கப்பட்டிருக்
கின்றான்."(70;19)
"ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான்."(70:20)
"ஆனால் அவனுக்கு
வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்ய தலைப்படுகிறான்"
(70:21)
"பிறரை விட கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது".(102:1)
"நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்)"
(102:2)
'அவ்வாறன்று விரைவில் உங்களுக்கு புரிந்து விடும்"(102:3)

Saif Saif

No comments:

Post a Comment