Wednesday, February 8, 2012

வெட்கப்படுவது ஒரு வெட்கக் கேடா!

வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக 

நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.
 
வெட்கப்படும்  போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம்   சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக  இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.

வெட்கப்படுவது பல காரணங்களால் ஏற்படலாம்.
  காதல் சூழ்நிலைகளில்  தொடர்புடையதாக இருக்கலாம் .வெட்கப்படும்  போதுதான் பெண்களின் தோற்றம் காட்சிக்கு அழகாக இருக்கின்றது . வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த பாதுகாப்பு.
வெட்கம், நாணம் கொள்வது பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பாகும்.
துணிவு இல்லாத போதும் வெட்கம் வர கால் நடுங்க உடலில் ஒரு மாற்றம் வரும்.
பல பெண்கள் நிறைந்த
கூட்டதில் தனியே ஒரு ஆண் நடந்து செல்லும் போது பெண்கள் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற நினைப்புடம் கூச்சம் வந்து வெட்கம் வரலாம். இதே நிலை பல ஆண்கள் நிறைந்த  கூட்டதில் தனியே ஒரு பெண் கடந்து செல்லும்போதும் ஏற்படும்.
மேடையில் பேசி பழக்கம் இல்லாதவருக்கும் இந்நிலை ஏற்படும். இந்த
வெட்க நிலை இயல்பானது அதில் தவறுமில்லை. ஆனால் தவறான காரியங்களில் ஈடுபடுவோர் அந்த கீழ்மையான செயலுக்கு வெட்கப் படாமல் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபடுவதுதான் வேதனையானது. முதல் முறை அந்த செயல் செய்ய வெட்கப்பட்டோர் பின்பு  அடுத்த முறை செய்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். இவர்களை மக்கள் வெட்கம் கெட்டோர் என்று சொல்வதனை நாம் அறிவோம்.  


9. 'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி) மதினாவாசியான ஒரு நபித்தோழர், தன் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவதைக் கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள், அவரைக் கண்டிக்காதீர்கள் நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானின் (நம்பிக்கையில்) ஒரு பகுதி என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

பெண்களுக்கு இஸ்லாம் ஒரு வரம்பைப் போடுகிறது.
1. பிற ஆடவரைக் கண்டால், பார்வையைத் தாழ்த்த வேண்டும்
2. ஆடைகளில் ஒழுங்கைப் பேண வேண்டும்
3. அந்நிய ஆண்களிடம் பேச்சில் நளினம் காட்டக் கூடாது
4. அந்நிய ஆணுடன் தனிமையில் இருக்கக் கூடாது

No comments:

Post a Comment