Saturday, November 26, 2016

நவீன ஏழ்மை ....!

பணம் இல்லாதவனை ஏழை என்றே உலகம் சொல்கிறது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் மனிதனின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பது பணம் என்பதாகும்.
பணம் இருப்பவன் படாபடோபமாக வாழ்வதும், பணம் இல்லாதவன் ஏழ்மையில் வாடுவதும் பணம்படுத்தும் பாடு அல்லாது வேறென்ன ?
ஏழ்மை என்பது வேறு ! எளிமை என்பது வேறு ! ஏழையும் வசதி படைத்தவனும் எளிமையாக வாழலாம் ஆனால் பணமில்லாமல் உலகத்தில் யாருமே வாழமுடியாதபடி தற்கால நுகர்வோர் பொருளாதார மாயவலை உலகில் பின்னப்பட்டுள்ளது.

பணம் இருந்தாலும் வசதி படைத்தவனாக வாழமுடியாதபடி வரைமுறைகளை வடிவமைத்து வரிவிதிப்புகளை அமல்படுத்தி குடிமக்களை கட்டுப்படுத்தி அடையப்போகும் இலக்குதான் என்ன ?
பொன்முட்டையிடும் தாராவை கழுத்தை நெரித்து கொல்லுதல் போலல்லவா இருக்கிறது !
வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவரை உயர்த்துதல்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாய கடமை. நடுத்தர மக்களை வறுமைக்கு தள்ளி விடுவதல்ல.
ஒருவனிடம் பணமிருந்தும் அது பாதுகாப்பாக அரசு வங்கியில் சேமிப்பாக இருந்தும் அதை தாராளமாக எடுத்து தனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் நிலையே நவீன ஏழ்மை எனலாம்.
எங்கும் எதிலும் நவீனம் வரலாம் !
வரவேற்போம்.
ஏழ்மையிலும் நவீனம் ....
என்னத்த சொல்ல ?
நாட்டு நடப்பு !
எண்ண ஓட்டம் ....!


ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment