Saturday, September 3, 2011
அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 6221 அனஸ் [...]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், '‘அல்லாஹ், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து உயிரை ஊதியவுடன் அவர்கள் தும்மினார்கள். உடனே ‘அல்ஹம்துலில்லாஹ்’ (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று அல்லாஹ்வை அவனது அனுமதியுடன் புகழ்ந்தார்கள். உடனே இறைவன் சொன்னான், ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உமக்கு அருள் புரிவானாக).
ஹாஜி நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment