Sunday, August 17, 2014

எட்டு வயதில் பல மொழிகளில் டைப்பிங் செய்யும் திறமை! 8 years old Multilingual Typist

சென்னையை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு செய்யும் தனது அபார திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றான். சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஆமினாள் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் மகமூத் அக்ரம். சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றான். பள்ளி படிப்பு மட்டுமின்றி, கணினியில் டைப்பிங் செய்யும் ஆற்றலையும் சிறு வயது முதலே அக்ரம் வளர்த்து வந்துள்ளான். தற்போது அவனுக்கு சுமார் 50 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சரளமாக டைப்பிங் செய்யும் ஆற்றலையும் வளர்த்துள்ளான்.

மேலும் படிக்க எட்டு வயதில் 50 மொழிகளில் டைப்பிங் செய்யும் திறமை! - ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சென்னை சிறுவன்! (வீடியோ) 
Source: http://newindia.tv/tn/tamilnadu/1

No comments:

Post a Comment