Thursday, November 24, 2011

கவிஞர் அஸ்மின் பாடல்கள் (இனிய வீடியோ இணைப்புடன் )

"இலங்கையில் ஒரு வானொலி ஊடகமும் இதுவரை எமது பாடலை ஒலிபரப்பாத நிலையில் எமது பாடல் வெளியாகி 4 நாட்களுக்குள் சுமார் 15,000க்கும் அதிகமான ரசிகர்கள் எமது பாடலை youtube மற்றும் ஏனைய இணையத்தளங்களின் மூலமாக பார்வையிட்டுள்ளனர்.இந்த மாபெரும் வெற்றி எமது முகநூல் நண்பர்களுக்கே சமர்ப்பணம்...."- கவிஞர் அஸ்மின்

"உலகத்தமிழர்களிடையே மிகவும் பிரபல்யமான இணையத்தளமான மனிதன் எமது பாடலை இன்று வெளியிட்டுள்ளது.உலகத்தில் நடக்கும் அபூர்வமான விடயங்களை, பரபபரப்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் வழங்குவதில் முன்னணியில் திகழும் மனிதன். முதல் முறையாக ஈழத்துகலைஞர்களின் பாடலை வெளியிட்டு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஈழத்து கலைஞர்கள் முன்னேறவேண்டும் என்ற அதன் சமூக அக்கறைக்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாட்டும்." - கவிஞர் அஸ்மின்
இலங்கையில் ஒரு வானொலி ஊடகமும் இதுவரை எமது பாடலை ஒலிபரப்பாத நிலையில் இலங்கையின் முதல்தர பத்திரிகையான 'வீரகேசரி' எமது பாடலை இன்று தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன் இயக்குனருக்கும், பொறுப்பாசிரியர், இணையத்தள ஆசிரியர்(Nirshan Nirshan Ramanujam ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
எமது சக கலைஞர்களின் பாடலுக்கும் இதே முக்கியத்துவத்தை பேதமின்றி வழங்கி ஈழத்தின் தமிழ் இசை எத்திக்கும் எதிரொலிக்க வழிவெட்டுங்கள்.உங்களுக்கு எமது உள்ளத்தின் தைட்டல்கள்-
- கவிஞர் அஸ்மின்
 
Please click here பொத்துவில் அஸ்மின் - தமிழ் ...
  எங்கோ பிறந்தவளே... -கவிஞர் அஸ்மின்
 'இது ஈழத்து கலைஞர்களின் படைப்பு''

''எங்கோ பிறந்தவளே.... ''என ஆரம்பிக்கும் இந்தப்பாடல் வெளிவந்த காலத்தில் இருந்து இற்றைவரைக்கும் பலரின் பார்வையையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. இப்பாடல் உள்நாட்டு வானொலிகளிலும்,ஐரோப்பிய வானொலிகளிலும் ஒலிபரப்பாகி வருகின்றன.இந்தப் பாடலுக்கான ஒளிபதிவு தற்போது சைப்பிரஸில் இடம்பெற்று வருகின்றது.இணையத்தளத்தில் இப்பாடல் வெளிவந்ததிலிருந்து ஈழத்தில் மட்டுமல்லாது பல புலம்பெயர் எம்மவர்கள் பலரும் இப்பாடல் பற்றி பேசிவருகின்றார்கள்.யுத்தத்தினால் எமது வாழ்வியல் அடித்து நொறுக்கப்பட்டாலும் ஏகாதிபத்தியத்தால் எமது ஆற்றல்களை அழிக்க முடியாது என்பதற்கு இந்த இளம் கலைஞர்களின் பாடல் சான்றாகின்றது.இந்தப்பாடலுக்கு இசையமைத்து பாடியிருக்கும் கந்தப்பு ஜெயந்தன் சக்தி தொலைக்காட்சியின் ''இசை இளவரசர்கள்'' நிகழ்ச்சி மூலம் இசை இளவரசனாக முடிசூடிக்கொண்டவர்.அவரது மிக விரைவில் வெளிவர இருக்கும் ''யாழ்தேவி'' இறுவட்டில் இப்பாடலும் இடம்பெற்றுள்ளது.இந்த பாடலை எழுதியிருக்கின்றார். 2010ம் ஆண்டுகான ''சிறந்த பாடலாசிரியர்'' விருதினை பெற்றுக்கொண்ட கவிஞர் அஸ்மின் அவர்கள். நீங்களும் வாருங்கள் பாடலை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

இசை:கந்தப்பு ஜெயந்தன்(வவுனியா
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின் (ஈழநிலா)
பாடலுக்கான கதைச் சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
பாடுபவர்: கந்தப்பு ஜெயந்தன்.

காதல்-கவிஞர் அஸ்மின் தித்திக்குதே-3-கவிஞர் அஸ்மின்

No comments:

Post a Comment